கதிர்பாரதி கவிதைகள் நரகத்தில் இருந்து ஒரு சொல் எடுத்து, சொர்க்கத்தின் நறுமணம் தடவி நம் முன் நடனமாடிச் சிரிக்கின்றன.
எருக்கம் விளாரால் விளாசிய வலி மீறி சிரிக்கும் அம்மாவிடம் சுருட்டைக் கொடுத்து புகைக்கச் சொல்கிற இவனது கருணை முன்பு மண்டியிட்டுக் கண்கள் மூடுகிறேன். கதிர்பாரதி, கவிதையின் முதல் வரியை எழுதுகிறான்... அதன் பிறகு அதனோடு என்னை ஒப்புக்கொடுப்பதைத் தவிர வேறு வழி இல்லை.
அரிசிமா சிக்குக் கோலத்தில் தன்னையே கிள்ளிவைக்கும் எஸ்தர் அத்தையின் பரிசுத்தக் காதலை எப்படி எல்லாம் எழுதிவிடுகிறான். கதிர்பாரதியின் எளிமையான மொழிதல் முறை இந்தக் கவிதைத் தொகுதியை இன்னும் அடர்த்தி கூட்டியிருக்கிறது.
உறுதியாகச் சொவேன்... தமிழின் மிக முக்கியமான பல கவிதைகளை இந்தத் தொகுப்பில் கதிர்பாரதி எழுதியிருக்கிறான். ஆம் நண்பர்களே அதற்கு நானே சாட்சி.
- எழுத்தாளர் பாக்கியம் சங்கர்
No product review yet. Be the first to review this product.